Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21
Monday, 01 June 2020 - 6:45
தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை- வெளியான காரணம்..!
2,536

Views
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
குறிப்பாக இவர் கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். அடுத்ததாக மாயன், யாருக்கும் அஞ்சேல் போன்ற படங்களில் நடித்து வந்த அவர், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
 
இந்நிலையில் நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைப்பதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். 
 
மேலும் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன் காரணமாகவே பிந்து மாதவி தற்போது வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top