பொதுத்தேர்தல் திகதி தொடர்பிலான உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது (காணொளி)

Tuesday, 02 June 2020 - 15:18

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தேர்தல் தினம் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 
ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் சம்பந்தமான சமர்பணங்கள் கடந்த 10 அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன.
 
இந்தநிலையில் மனுக்கள் மீதான பூர்வாங்க விசாரணைகள் நேற்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த மனுக்களை தொடர்ந்தும் விசாரிப்பதா இல்லையா என்பதை அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
 
இதன்படி இந்த மனுக்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டன.
 
இந்த நிலையில், பொதுத்தேர்தலுக்கான திகதியை நாளைய தினம் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் சந்திப்பின் பின்னர் தீர்மானிக்க உள்ளதாக ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இதேவேளை, உத்தேச பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 
அரசாங்க அச்சக மா அதிபர் கங்கானி லியனகே எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
 
இதன்படி, ஒரு கோடியே 69 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.