மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்

Tuesday, 02 June 2020 - 20:50

%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1649 ஆக அதிகரித்துள்ளது.
 
இவர் அண்மையில் ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருந்த 12 நோயாளர்கள் இன்று பூரணமாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
 
தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
 
இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.