சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசித்த இருவர் கைது

Tuesday, 02 June 2020 - 21:55

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலைமன்னாரிற்கு பிரவேசித்த இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
1991 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த 33 வயதான ஆண் ஒருவரும் அவரது 8 வயது மகளுமே கைது செய்யப்பட்டதாக மடு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
அவர்கள் தமிழ்நாடு - கோயம்புத்தூர் ஏதிலிகள் முகாமில் வசித்து வந்தனர்.
 
இந்தநிலையில் நேற்றைய தினம் அவர்கள் தலைமன்னார் கடற்பரப்பை  வந்தடைந்துள்ளனர்.
 
அவர்களை வரவேற்பதற்காக குறித்த இளைஞனின் தந்தை தலைமன்னார் கடற்பரப்பிற்கு சென்றுள்ளார்.
 
இது தொடர்பில் காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த மூன்று பேரையும் காவற்துறையினர் பொறுப்பேற்றனர்.
 
இதனையடுத்து, குறித்த மூன்று பேரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக புனானை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.