பெற்ற பிள்ளையை நரபலி கொடுத்த தந்தை....! காணொளி

Thursday, 04 June 2020 - 13:16

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88....%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
தான் பெற்ற மகளை தானே கொலை செய்த கொடூர தந்தையின் கதையே இது...இந்தியாவின்-கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த 55 வயதான பன்னீர் செல்வம் என்ற நபர் ஒரு கட்டிட தொழிலாளியாக கடமையாற்றி வந்துள்ளார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் ஆறு பிள்ளைகள்.

முதலாவது மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் என இருந்துள்ளனர்.

09 பேர் கொண்ட இந்த குடும்பத்தில் பன்னீர் செல்வத்தின் உழைப்பு மாத்திரமே பிரதான வருவாயாக காணப்பட்டது.

சிறந்த உழைப்பாளியான இவரிடம் மூடநம்பிக்கைகள் அதிகம் காணப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், எப்படியாவது குறுகிய காலத்துக்குள் அதிகம் பணம் சம்பாரித்து விட வேண்டும் என்ற பேராசையும் இவரிடம் காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர் அப்பகுதியை சேர்ந்த பெண் மந்திரவாதி ஒருவரிடம் இதற்காக ஆலோசணை பெற்று வந்துள்ளார்.

சிறிது காலம் அவர் கூறிய படி செய்தால் சீக்கிரம் செல்வந்தராகிவிடலாம் என்பது அந்த மந்திரவாதியின் போதனையாக காணப்பட்டது.

மூடநம்பிக்கையால் மூழ்கியிருந்த பன்னீர் செல்வமும் அவர் கூறிய படியே செய்துவந்துள்ளார்.

ஒரு நாள் நீ செல்வந்தராக வேண்டும் என்றால் உனது முதல் மனைவியின் நான்கு பிள்ளைகளில் ஒருவரை பலிகொடுக்க வேண்டும் என பெண் மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

அப்படி செய்தால் அதிகம் செல்வம் கிடைக்கும் எனவும் அந்த குறித்த மந்திரவாதி குறிப்பிட்டுள்ளார்.

போலி மந்திரவாதியின் பெய்யான இந்த போதனைகளை நம்பிய பன்னீர் செல்வம் அதற்கான எற்பாடுகளை மும்முரமாக முன்னெடுத்துள்ளார்.

ஒரு நாள் இரவில் விடிய விடிய பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 03 மணியளவில் முதலாவது மனைவியின் மூன்றாவது மகளை அழைத்து அவள் கையில் குடம் ஒன்றை கொடுத்து கிணற்றில் தன்னீர் எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார் பெண் மந்திரவாதி.

இந்நிலையில் தண்ணீர் எடுக்க சென்ற அந்த 13 வயது சிறுமியின் பின்னால் அவரது தந்தையும் சென்றுள்ளார்.

தன் கையில் இருந்த துணியால் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் குறித்த சிறுமியின் தந்தை.

அவருடைய இந்த செயலை முதலாவது மனைவி, இரண்டாவது மனைவி மற்றும் பெண் மந்திரவாதி ஆகியோர் ரசித்துக்கொண்டிருந்தனர்.

சில நாட்களின் பின்னர் காவல் துறையினருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் தந்தை மற்றும் பெண் மந்திரவாதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளப் பெருக்கு காரணமாக 60 பேர் உயிரிழப்பு
Thursday, 16 July 2020 - 14:33

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெற்றப்பெருக்கால்... Read More

சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை
Thursday, 16 July 2020 - 13:50

மனித செயற்பாடுகள் காரணமாக சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை... Read More

விக்டோரியா மாநிலத்தில் 317 பேருக்கு கொரோனா
Thursday, 16 July 2020 - 13:02

இந்தியாவில் நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை... Read More