இலங்கை-இந்திய கிரிக்கட் தொடர் ஒத்திவைப்பு..? சம்மி டி சில்வா

Friday, 05 June 2020 - 7:21

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%3F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE
எதிர்வரும் ஜூலை மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்திய அணியுடனான போட்டித் தொடரை பிற்போடுவதற்கு நேரிட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் சம்மி டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
 
நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுடன் இடம்பெறவிருந்த சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் வாரமளவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் குறித்த போட்டித் தொடருக்கான புதிய திகதி குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம் மாதங்களில் குறித்த போட்டியை நடத்த கூடிய வாய்ப்புள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்தார்.