Hirunews Logo
IPL+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+BCCI
Friday, 05 June 2020 - 12:52
IPL தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் BCCI
784

Views
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து வழிமுறைகள் தொடர்பிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கவனம் செலுத்தியுள்ளது.
 
இந்தியாவில் போட்டியை நடத்த முடியாவிட்டால், வெளிநாட்டில் போட்டியை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
எவ்வாறாயினும் வேறு வழிமுறைகள் கிடைக்காதபட்சத்தில் மாத்திரமே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
 
கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த  இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலும் 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்டிருந்தமை குறி;ப்பிடத்தக்கது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top