Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..%21
Friday, 05 June 2020 - 12:54
பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ள இந்தியா..!
724

Views
இலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்தியா எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை தெரிவித்துள்ளார்.
 
உணவு பாதுகாப்பு, மருந்து மற்றும் விவசாய உற்பத்தி, எரிபொருள் சுத்திகரிப்பு உள்ளடங்களான பல துறைகளில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை வடக்கில் புதிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தவதற்கும் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கும் 25 கோடி ரூபாய் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top