Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
Friday, 05 June 2020 - 20:24
தனிப்பட்ட முறையில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்...!
413

Views
பங்களாதேஷ் தேசிய விளையாட்டு திடலான ஷே-ஈ-பெங்ளாவில் தனிப்பட்ட முறையில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என பங்களாதேஷ் முன்னணி கிரிக்கட் வீரர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

முஷ்பிகர் ரஹீம் தலைமையிலான முன்னணி வீரர்கள் விடுத்த வேண்டுகோள் பங்களாதேஷ் கிரிக்கட் சபையினால் நிராகரிக்கப்;பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்புக்கான கிருமி நீக்கல் நடவடிக்கை விளையாட்டு மைதானத்தில் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என காரணம் காட்டியே கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

முடக்கல் நடவடிக்கைகள் கடந்த 31ஆம் திகதி அரசாங்கத்தினால் தளர்த்தப்பட்ட நிலையில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை தமது மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை ஆரம்பித்தது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் வழிகாட்டல் விதிகளுக்கு அமைய பங்களாதேஷ் கிரிக்கட் சபை செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பங்களாதேஷில் 747 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top