கொணா கோவிலே ராஜா உயிரிழப்பு

Sunday, 07 June 2020 - 7:25

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'கொணா கோவிலே ராஜா' என்பவர் காவல்துறையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
 
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
 
இன்று அதிகாலை குறித்த சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.
 
மினுவாங்கொடை - பல்லபான - தூனகஹா வீதியில் காவல்துறை மற்றும் சந்தேகநபர் ஆகியோருக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது காயமடைந்த சந்தேகநபர் திவுலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
 
சம்பவத்தில் 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
 
ரத்மலானை மற்றும் மொரட்டுவை பகுதிகளில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுடன் தொடர்புடைய அவர் பல பெயர்களில் அழைக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
 


நாட்டின் தற்போதைய நிலை மாற்றமடைய வேண்டும்..! காணொளி
Thursday, 16 July 2020 - 21:55

நாட்டில் தற்பொழுது காணப்படும் அரசியல் கலாச்சாரம் மாற்றமடைய... Read More

ஜா-எல காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல் துறை தலைமையகத்திற்கு மாற்றம்..!
Thursday, 16 July 2020 - 21:18

ஜா-எல காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல் துறை தலைமையகத்திற்கு... Read More

விலைபோகும் அரசியல்வாதிகள் தொடர்பில் சஜித் பிரேமதாசவின் கருத்து...!
Thursday, 16 July 2020 - 21:00

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலர் பங்குக்கொள்ள காரணம் தமது... Read More