ஒரே நாளில், 9 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா..

Sunday, 07 June 2020 - 13:31

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C+9+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+971+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..
இந்தியாவில் ஒரே நாளில், 9 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 278 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
 
இதற்கு அமைய இதுவரை, 2 லட்சத்து 46 ஆயிரத்து 628 கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் இன்று காலை வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதுவரையில் இந்தியாவில் 6 ஆயிரத்து 929 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் பிருத்தானியா ஆகிய நாடுகளுக்கு பின்னர் அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கு உள்ளான ஐந்தாவது நாடாக இந்தியா தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஆறு ஆயிரத்து 929 பேர் உயிர்கொல்லிக்கு பலியாகியுள்ளதாக அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிலையத்தின் இயக்குனர் ரண்தீப குலேரியா தெரிவித்துள்ளார்.
 
எதிர் வரும் இரண்டு மூன்று மாத காலப்பகுதியினுள் தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள அவர், எப்படியிருப்பினும் இது சமூகத்தின் நடவடிக்கைகள் காரணமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்ராவிற்கு அடுத்ததாக தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்ககையான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
 
 


வெள்ளப் பெருக்கு காரணமாக 60 பேர் உயிரிழப்பு
Thursday, 16 July 2020 - 14:33

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெற்றப்பெருக்கால்... Read More

சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை
Thursday, 16 July 2020 - 13:50

மனித செயற்பாடுகள் காரணமாக சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை... Read More

விக்டோரியா மாநிலத்தில் 317 பேருக்கு கொரோனா
Thursday, 16 July 2020 - 13:02

இந்தியாவில் நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை... Read More