தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்திய பிரபல பாடகரின் மரணம்...!

Friday, 19 June 2020 - 13:52

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D...%21
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை எம்.என். ராஜ்மின் கணவரும் பின்னணிப் பாடகருமான எ.எல். ராகவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன் என்கிற எ.எல்.ராகவன் 1933ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் பிறந்தவராவார்.

தனது 10 வயது முதல் பால கான விநோத சபாவில் பாடகராக இருந்த எ.எல். ராகவன், 1947-ல் கிருஷ்ண விஜயம் படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார்.

திரைப்படங்களின் பின்னணிப் பாடகராக இருந்த எ.எல். ராகவன், ஆரம்பக் காலங்களில் பெண் குரல்களிலும் பாடியுள்ளார்.

பிறகு புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து 'ஹலோ மை டியர் ராமி' என்கிற பாடலின் மூலம் ஆண் குரலில் பாட ஆரம்பித்தார் எ.எல். ராகவன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பலருடனும்  இணைந்து பல துணைக்கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் இவருக்காக ஓர் ரசிகர்கள் கூட்டம் உள்ளமை விசேடம்சமாகும்.

இந்நிலையில், திடீரென இன்று காலை எ.எல். ராகவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இவரது மறைவு தமிழ் சினிமாவில் ஓர் இடைவெளியை ஏற்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.