Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D...%21+
Monday, 22 June 2020 - 16:41
டுவிட்டரை தெறிக்கவிட்ட நடிகர் விஜய்...!
1,572

Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் இன்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இவருக்கு வாழத்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்  

அதேபோல் டுவிட்டரிலும் #HappyBirthdayThalapathyVijay என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் தற்சமயம் டிரெண்டாகி உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இருப்பினும் மாஸ்டர் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்படாமை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மாஸ்டர் படக்குழுவினர் மாஸ்டர் திரைப்படத்தின் மாஸ் புகைப்படம்  ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top