இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்...!

Saturday, 27 June 2020 - 8:27

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D...%21
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தல், மேற்பார்வை செய்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

ஒழுங்குமுறைப்படுத்தப்படாத பணம் கடன் வழங்கல் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு சட்டக் கட்டமைப்பொன்றினை ஆக்கவேண்டியதன் அவசியத்தினை இலங்கை மத்திய வங்கி மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறது.

இதன்மூலம் எதிர்காலத்தில் பணம் கடன் வழங்கல் நிறுவனங்களுக்காக சிறந்ததும் மிகக் காத்திரமானதுமான ஒழுங்குமுறைப்படுத்தல் சூழல் உருவாக்கப்படும்.

எனவே, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட உத்தேச நுண்பாக நிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைச் சட்டத்தினை ஆக்குவதற்கான அவசியம் தவிர்க்கமுடியாததாகும் என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.