பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு நடந்தது என்ன..?

Monday, 29 June 2020 - 16:14

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9..%3F
கடந்த பல ஆண்டுகளாக பின்னணி பாடகியாக இருந்து வரும் எஸ். ஜானகி அவர்களின் உடல்நிலை குறித்து திடீரென சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்தன.

வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் ஜானகி அவர்களுக்கு சமீபத்தில் ஒரு சிறிய அளவில் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஜானகி அவர்கள் முற்றிலும் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகன் உறுதி செய்துள்ளார்

பின்னணி பாடகி ஜானகி உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளியாகி வருவதாகவும் அதேபோல் இன்றும் ஒரு வதந்தி பரவி வருவதாகவும், தயவு செய்து இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ஜானகியின் மகன் உறுதி செய்துள்ளார்

ஜானகி மகன் முரளி கிருஷ்ணா இது குறித்து மேலும் கூறியபோது “அம்மாவிற்கு சிறிய அளவிலான ஆப்ரேஷன் ஒன்று நடந்துள்ளது தற்போது அவர் உடல் நிலை சீராக முன்னேறி வருகிறது. தயவு செய்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். அம்மா முழு உடல் நலத்துடன் உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஜானகியின் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.