Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Monday, 29 June 2020 - 19:18
பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல்- உரிமைக் கோரிய பலோச் விடுதலை இராணுவம்
41

Views
கராச்சியில் உள்ள பாகிஸ்தானிய பங்கு சந்தையில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலுக்கு பலோச் விடுதலை இராணுவம் என்ற போராளிக்குழு உரிமை கோரியுள்ளது.
 
பாகிஸ்தானின் பலோச்சிஸ்டன் மாகாணத்தில் தனிநாடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இந்த குழுவினர் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
 
இன்று காலை கராச்சி பங்கு சந்தை கட்டிட தொகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாக கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்த இந்த குழுவின் உறுப்பினர்கள், பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.
 
ஆயுததாரிகளின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இருவர் பலியான நிலையில், பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் ஆயுததாரிகள் நால்வரும் கொல்லப்பட்டனர்.
 
சம்பவத்தில் பங்குச்சந்தைக்கு வருகை தந்திருந்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
 
தாக்குதல் நடத்தியவர்கள், பங்கு சந்தை பரிவர்தனை நடைபெறும் கூடத்திற்கு நுழைய முற்பட்ட போதிலும் அதற்கு முன்னரே அவர்கள் கொல்லப்பட்டதாக மேலதிக காவல்துறை மா அதிபர் குலாம் நபி மெமொன் தெரிவித்துள்ளார்.
 
பணியாளர்கள் பலர் மூடிய கதவுகளின் பின்னால் மறைந்திருந்ததால் எந்த பாதிப்பும் இன்றி தப்பியுள்ளனர்.
 
பின்னர் அவர்கள் பின் கதவின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பங்குச் சந்தை தொகுதியுடன் பல்வேறு நிதி நிறுவனங்கள், அமைப்புக்கள், வர்த்தக வங்கிகள் மற்றும் பிரபல வர்த்தக நிறுவனங்கள் என்பன உள்ளடங்குகின்றன.
 
வழமையான தினங்களில் 8 ஆயிரம் பேர் பங்குச் சந்தையில் பணியாற்றுகின்றனர்.
 
இருப்பினும், தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல பணியாளர்கள் வீட்டில் இருந்தே இணையத்தின் ஊடாக பணியாற்றுவதனால் பங்கு சந்தைக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு கராச்சியில் உள்ள சீன பிரதி தூதுவராலயத்தை தாக்கிய போது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
 
அதேபோன்று, கடந்த வருடம் அதிக அளவிலான சீன உயர்மட்ட வர்த்தகர்கள் தங்கியுள்ள பலோச்சிஸ்டானில் உள்ள குவாடர் துறைமுக நகர ஐந்து நட்சத்திர விருந்தகம் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top