Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Tuesday, 30 June 2020 - 7:25
தம்புள்ளை கொலைச் சம்பவம்- மற்றுமொரு சந்தேக நபர் மாத்தளையில் கைது (படங்கள்)
366

Views
சமீபத்தில் தம்புள்ள, இஹல எரவுல, கோனவெவ பிரதேசத்தில் இளைஞரொருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மாத்தளை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நேற்றைய தினம் (29) தம்புள்ளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த 16ஆம் திகதி கோனவெவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் வைத்து எரித்து கொள்ளப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்றை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
 
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அப்பகுதியில் மணல் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகன சாரதி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனங்களின் உரிமையாளர்கள் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top