Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Tuesday, 30 June 2020 - 11:55
சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
989

Views
அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைந்த போதிலும் தொற்றால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
 
இதற்காமை அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 44 ஆயிரத்து 734 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 346 பேர் உயிரிழந்தனர்.
 
அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 26 லட்சத்து 81 ஆயிரத்து 811 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
 
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் பிரேசில் நாட்டிலேயே அதிகளவானவர்கள் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தனர்.
 
குறித்த காலப்பகுதியில் பிரேசிலில் 727 பேர் பலியாகியுள்ளமைக்கு அமைய கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.
 
அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசில் நாட்டில் 25 ஆயிரத்து 324 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமைக்கு அமைய தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 70 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.
 
இதேவேளை, தெற்காசிய நாடுகளில் இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது.
 
அந்த நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 ஆயிரத்து 339 பேர் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அத்துடன் இந்தியாவில் இந்த காலப்பகுதியில் கொரோனா வைரசால் 417 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதற்கமைய இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் இதுவரை மொத்தமாக 5 லட்சத்து 67 ஆயிரத்து 536 பேர் பீடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 16 ஆயிரத்து 904 பேர் பலியாகியுள்ளனர்.
 
இதன்படி சர்வதேச ர்Pதியில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 4 லட்சத்து 8 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது.
 
அத்துடன் 5 லட்சத்து 8 ஆயிரத்து 78 பேர் பலியாகியுள்ளனர்.
 
எனினும் உலகளவில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த 56 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எனினும் அவுஸ்திரேலிய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர் பிட்போடப்பட்டாலும் கட்டாயம் இடம்பெறும் என கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top