Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
Tuesday, 30 June 2020 - 13:35
ராஜித்த தாக்கல் செய்த மனுவினை மீளப்பெற்றுக்கொண்டார்...!
303

Views
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்வினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மீள்திருத்த மனு இன்று மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மனு அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தன்னுடைய மனுதாரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையினால் குறித்த மனுவினை தொடர்ந்து விசாரணைகளுக்குட்படுத்த வேண்டிய தேவை இல்லை என கருதுவதாக ராஜித்த சேனாரத்ன தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த மனுவை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு குறித்த சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.

குறித்த கோரிக்கைக்கு அமைய மனுவினை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் குழாம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

வெள்ளைவேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன தன்னை பினையில் விடுதலை செய்யுமாறு மீள்திருத்த மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபருக்கு பதிலாக முன்னிலையாகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்,  தற்போதும் அவர் பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top