Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Tuesday, 30 June 2020 - 13:04
பிரதமர்-மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு
25

Views
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
 
அலரி மாளிகையில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
கொவிட் - 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாலைதீவு எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
 
இந்தநிலையில், மாலைத்தீவில் விருந்தக துறையில் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமையைப் போன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர் ஸ்தானிகர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
 
இதன்போது மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதற்கு பதில் வழங்கியுள்ள மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக், வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய 15 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்கும் இடையிலான இலங்கை பணியாளர்கள் மாலைத்தீவில் பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top