ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உதவி காவற்துறை அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு

Tuesday, 30 June 2020 - 14:02

+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஐ எஸ் ஐ எஸ் கோட்பாடுகள் குறித்து அரச புலனாய்வு பிரிவு  ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும், எந்த ஓர் சந்தர்ப்பத்திலும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் பதிவு செய்த போது இவ் விடயம் அறியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உதவி காவற்துறை அதிகாரி எஸ் ஜீ சதரசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை ஐ எஸ் ஐ எஸ்  அமைப்பின் செயற்பாட்டாளர்கள் 28 பேர், சிரியா நோக்கி பயணித்துள்ள நிலையில் 3 பேர் விமான தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது.

இதனிடையே உள்நாட்டில்  ஐ எஸ் ஐ எஸ்  செயற்பாட்டாளர்கள் 100 பேருக்கும் அதிகமானவர்கள் காணப்படுவதாகவும் கொழும்பு கண்டி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் தங்கியிருப்பதாக அரச புலனாய்வு அதிகாரி தனக்கு அறியப்படுத்தியதாக சாட்சியாளர் தெரியப்படுத்தியுள்ளார்.