Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE....%21
Wednesday, 01 July 2020 - 10:17
நடிகர் அமீர் கானுக்கு கொரோனாவா....!
223

Views
பொலிவுட் நடிகர் ஆமீர் கான் வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமீர் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமீர் கான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது..

அனைவருக்கும் வணக்கம்

என் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் என டெஸ்ட் முடிவு வந்துள்ளது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் உடனடியாக தனிமைப் படுத்தப்பட்டனர். அதிகாரிகள் மிகவும் துரிதமாக செயல்பட்டு அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவர்களை நன்றாக பராமரித்துக் கொள்ளும் அதிகாரிகளுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மேலும் மொத்த சமூகத்தையும் இடத்தையும் கிருமிகள் இல்லாமல் சுத்தம் செய்கின்றமைக்கு செய்ததற்கு நன்றிகள்.

என் குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொ்ளப்பட்டுள்ளதோடு பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. தனக்கு உட்பட தன்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை.

தற்போது நான் என் அம்மாவை பரிசோதனைக்காக  அழைத்துச் செல்கிறேன். அவர்தான் குடும்பத்தில் டெஸ்ட் எடுக்கப் போகும் கடைசி நபர். அவருக்கும் கொரோனா தொற்று இல்லாமலிருக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு மிகவும் பரிவுடன் உதவி செய்த பிஎம்சி அதிகாரிகளுக்கு நான் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்.

அன்புடன்
அமீர்

என ட்விட்டரில் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top