ஜிந்துபிடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பில் வௌியான தகவல் (காணொளி)

Friday, 03 July 2020 - 7:32

%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29


நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 12 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
 
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு இதனை அறிவித்துள்ளது
 
இதற்கமைய நாட்டில் இதுவரையில் இரண்டாயிரத்து 66 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
 
அத்துடன்; 228 பேர் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதற்கிடையில் நாட்டில் கொவிட் - 19 தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 79 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
 
இதன்படி நாட்டில் கொவிட் - 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,827 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
நேற்று தொற்றுறுதியான அனைவரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும் இந்தியாவில் இருந்து திரும்பிய இருவருக்கும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
 
இதேவேளை இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரில் ஒருவர் கடலோர பாதுகாப்பு அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
அவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
 
அத்துடன் முன்னர் அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து அவர்கள் கொழும்பு - ஜிந்துபிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
 
இந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
 
இதற்கமைய அவர்கள் சமூகத்தில் தொற்றுறுதியானவர்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.