விவசாயிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி...!

Friday, 03 July 2020 - 7:17

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21
கொவிட் 19 காரணமாக விவசாய உற்பத்தி அதிகரித்திருப்பதனால் விவசாயிகளுக்கு தேவையான மேலதிக உரத்தை கொள்வனவு செய்வதற்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
தற்பொழுது நடைமுறையில் உள்ள உர நிவாரண வேலைத் திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரையிலான நெல் உற்பத்திக்காக உர நிவாரணைம் வழஙகப்படுகின்றது.
 
இதற்கு மேலாக கூடுதலான நிலப்பரப்பிற்கு தேவையான உரத்தை பகிரங்க சந்தையில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலைமையின் கீழ் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு சந்தைகளில் ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரத்திற்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதுடன், விசேடமாக கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பரப்பு அதிகரித்ததினால் உரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது.
 
இந்தநிலையில் அரசாங்கத்தின் உர நிறுவனத்தினால் நெல் உற்பத்திக்கான உரத்தை இறக்குமதி செய்யப்படுவதில் எஞ்சியிருக்கும் உரத்தை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களின் மூலம் கொள்வனவு செய்து 50 கிலோ எடையைக் கொண்ட உரப்பொதியொன்று 1000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை
Monday, 03 August 2020 - 7:34

பொருளாதார உரிமையை மக்களுக்கு கிடைக்கும் வகையிலான கொள்கையொன்றின்... Read More

சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு..!
Sunday, 02 August 2020 - 10:01

சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள்... Read More

ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு
Saturday, 01 August 2020 - 20:14

இலங்கையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை மாதத்தில் சற்று அதிகரித்து... Read More