மீண்டும் வழமைக்கு - மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

Friday, 03 July 2020 - 13:18

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் (2020-07-01) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டின் அனைத்து பொது சேவை அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடைநிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் தொலைப்பேசி வாயிலாக முன்ஒதுக்கீடுகளை மேற்கொள்பவர்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது முன்ஒதுக்கீடுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும், போக்குவரத்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போக்குவரத்து திணைக்கள சேவையினை பெற்றுக்கொள்ள சமூகம் தருபவர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் அணிதல், தொற்று நீக்கிகைளை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பேணுதல் ஆகியன கடைப்பிடிக்கப்படுதல் அவசியமாகும் எனவும் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.