இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Friday, 03 July 2020 - 13:09

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
கொவிட்-19 தொற்றுறுதியான 29 கடற்படையினர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
 
கடற்படை பேச்சாளர் இசுறு சூரியபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய கொவிட்- 19 தொற்றுறுதியான 877 கடற்படையினர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
 
இதேவேளை, இந்தியாவிலிருந்து நாடு திரும்பி கொழும்பு - ஜிந்துபிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.
 
இதன்காரணமாக குறித்த பகுதியிலுள்ள 29 குடும்பங்களை சேர்ந்த 153 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவண் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் நாடு திரும்பிய குறித்த நபர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போதே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களில் மேலும் 36 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
 
நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அவர்களில் ஆயி;ரத்து 827 பேர் குணமடைந்துள்ள நிலையில் 192 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.