சட்டமா அதிபரின் கருத்து..!

Friday, 03 July 2020 - 19:37

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மீத மக்களுக்கு காணப்பட்ட மரியாதை குறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேறா தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேறாவுக்கும், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் காரியாலயத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.