ஊவா ப்றீமியர் லீக் 20க்கு20 தொடர்- பல மோசடி நிறுவனங்கள் சுற்றிவளைப்பு

Saturday, 04 July 2020 - 12:50

%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8120+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஊவா பிரீமியர் லீக் என்ற பெயரில் போலியான 20க்கு 20 கிரிக்கட் தொடரை நடத்தி பந்தய மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இந்தியாவின் மொஹாலி காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
 
குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய 8 நிறுவனங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 6 சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கையில் மண்ணில் மீண்டும் கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ளதாக மொஹாலி நகரில் இருந்தே குறித்த மோசடிகள் இடம்பெற்று வந்துள்ளன.
 
குறித்த தொடரில் இலங்கை அணியின் டில்ஷான், பர்விஸ் மஹ்ரூப் மற்றும் அஜந்த மென்டிஸ் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் விளையாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எவ்வாறாயினும் இது ஒரு போலியான செய்தி என இலங்கை அணியின் முன்னாள் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் தமது ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் இவ்வாறான தொடர் ஒன்று இலங்கையில் இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கவில்லை என ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் மற்றும் ஊவா மாகாண கிரிக்கட் கழகம் ஆகியன தெரிவித்துள்ளன.


அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளருக்கு போட்டி அபராதம்
Monday, 03 August 2020 - 13:50

அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில்க்கு... Read More

IPL தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரோஹித் சர்மா வேண்டுகோள்..!
Monday, 03 August 2020 - 13:31

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது வீரர்களுக்கான... Read More

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் IPL தொடர்
Monday, 03 August 2020 - 8:09

எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில்... Read More