ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..! (காணொளி)

Saturday, 04 July 2020 - 14:10

%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+50+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+PCR+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
கொடஹென-ஜிந்துபிடிய பகுதியில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட 50 பேரின் PCR பரிசோதனைகள் தற்போது வெளியாகியுள்ளன.
 
இதில் குறித்த 50 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் இலங்கையில் மொத்தமாக 1885 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு, கொரோனா தொற்றுக்குள்ளான 174 பேர் மாத்திரமே மருத்துவமனைகளில் இதுவரை சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில், ஜிந்துபிடிய பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 50 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகாத நிலையில், அவர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை கடந்த மே மாதம் 23ஆம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்று காரணமாக கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 62 வயதுடைய பெண்ணொருவர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.