நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

Sunday, 05 July 2020 - 7:26

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF....%21
நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் ஐந்து பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 74 ஆக உயர்வடைந்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும், அமெரிக்கா, மடகஸ்கார் மற்றும் பங்களதேஸில் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவருக்கும் இவ்வாறு நேற்றைய தினம் கொரோனா தொற்றுறதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 22 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுதியானவர்களில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 885 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுதவிர, 178 கொரோனா நோயாளர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.