பாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி..நாளை முதல் மீண்டும் ஆரம்பம்...!

Sunday, 05 July 2020 - 8:08

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...%21
கொவிட்-19 காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாளை இரண்டாம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளைய தினம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 5 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சகல ஆசிரியர்களுக்கும் காலை 7.30க்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் கற்பிக்கும் பாடநெறி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலைகளுக்கு சமூகமளித்தல் போதுமானது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 12 மற்றும் 10 தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

அடுத்த மாதம் 27 ஆம் திகதி முதல் 3,4,6,7,8 மற்றும் 9ம் தரங்களில் பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.