இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து ஓர் நற்செய்தி

Sunday, 05 July 2020 - 18:58

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ள வர்த்தகர்களுக்கு இலகு கடனாக 58 பில்லியன் ரூபாவினை வழங்கும் திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
 
இதுதவிர இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் காலவரையரையின்றி நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
ஜூலை 2 வரையிலான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 240 வர்த்தக நிறுவனங்களுக்கு 52 பில்லியன் ரூபாவினை வழங்குவதற்கான அனுமதி மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி நிறைவடைந்த முதலாவது கட்டத்தின் போது 28 பில்லியன் ரூபாய் 13 ஆயிரத்து 926 வர்த்தகர்களுக்கு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.