பல்வேறு மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய 57 பேர் கைது

Sunday, 05 July 2020 - 23:17

+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+57+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டுதலுக்கு அமைவாக மேல்மாகாணத்தில் ஊழல் விசாரணை காரியாலயத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படட விசேட சோதனை நடவடிக்கைகளில் 57 சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 9 பெண்களும் 48 ஆண்களும் உள்ளடங்குவதோடு மோசடி செய்தல், ஏமாற்றி பணம் பறித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல், பல திருமணங்கள் செய்தல் உள்ளிட்ட 70 குற்றங்களின் கீழ் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் அனைவரையும் கைது செய்ததன் மூலம் எதிர்காலத்தில் சுமார் 1 கோடியே 84 இலட்சம் (108,470,356) ரூபா மோசடி முறியடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் அனைவரும் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.