ஜப்பானில் வெள்ளம்- பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு

Tuesday, 07 July 2020 - 20:39

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+50%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
ஜப்பானின் தென் பகுதியில் உள்ள குமமாட்டோ பிராந்தியத்தில், மழை வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.