இங்கிலாந்து-பாதிஸ்தான் கிரிக்கட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

Wednesday, 08 July 2020 - 12:58

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி மென்செஸ்டரில் ஓகஸ்ட் தாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டவாது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியும் மூன்றாவது டெஸ்ட் போட்டி 21 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

அத்துடன், இரு அணிகளுக்கு இடையில் மூன்று 20க்கு 20 கிரிக்கட் போட்டிகளும் இடம்பெறவுள்ளது.

இதில் முதலாவது போட்டி ஓகஸ்ட் 28 ஆம் திகதியும் இரண்டாவது போட்டி 30 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டி செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

குறித்த போட்டித் தொடர் சவுதம்டனில் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் முதல் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.