சீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து விபத்து- 21 பேர் பலி

Wednesday, 08 July 2020 - 13:02

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-+21+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குய்ஷோ புரiணாழர மாகாணத்தின் அன்சுன் யுளொரn பகுதியில் நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாலம் ஒன்றில் பயணித்த பேருந்து ஒன்று, வேகக் கட்டுபாட்டை இழந்து, அருகிலிருந்து மதிலை உடைத்துக்கொண்டு நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்துள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்தவர்களில் மாணவர்களும் உள்ளடங்கியிருந்தாகவும், எனினும் பேருந்து விபத்துக்கு உள்ளான சந்தர்ப்பத்தில் அதில் பயணித்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.