ஆட்டநிர்ணய சதி தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்...!

Wednesday, 08 July 2020 - 16:48

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D...%21
2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் எந்தவித ஆட்டநிர்ணய சதியும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாருக்கு வழங்கப்பட்ட அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பபட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனை கோரியே அந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பபட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, விளையாட்டுத்துறை குற்றங்களை ஆராயும் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி இலங்கை அணியின் முன்னாள் வீரர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதனையடுத்து, குறித்த ஆட்டநிர்ணய சதியில் எந்தவீரர்களும் ஈடுபடவில்லை என விளையாட்டுத்துறை குற்றங்களை ஆராயும் குழு அந்த அமைச்சிற்கு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கிலே விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.