வெளியிடப்படவுள்ள விஜய் திரைப்படம்....! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Thursday, 09 July 2020 - 8:40

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D....%21+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதற்காக அவர் நடிக்கும் படங்கள் தெலுங்குஇ மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தெலுங்கில் மிகப்பெரியளவில் வசூல் சாதனை செய்தமை குறிப்பிட்டுக்காட்டக்கூடிய விடயமாகும்.

இந்நிலையில், விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'ஜில்லா' படத்தின் தெலுங்கு பதிப்பை சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை 2014-ம் ஆண்டே தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டு, அங்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கி வரும் பிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகள் ஜில்லா படத்தில் எடுக்கப்பட்டிருந்தன.

தமிழில் அந்த காட்சிகள் சேர்க்காமல் நீக்கப்பட்டிருந்தது.


சில காரணங்களால் அப்போது ஜில்லா படம் தெலுங்கில் வெளியாகவில்லை.

எனவே தற்போது தெலுங்கில் வெளியாவதால் விஜய்யுடன் பிரம்மானந்தம் நடித்துஇ நீக்கப்பட்ட காட்சிகள்இ மீண்டும் இணைக்கப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் பெறும் ஆவலுடன் உள்ளனர்.