இந்தியாவில் 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Friday, 10 July 2020 - 11:50

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+26%2C506+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+
இந்தியாவில் முதற்தடவையாக ஒரே நாளில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
 
இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்றுறுதியான 26 ஆயிரத்து 506 பேர் அடையாளம் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 475 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது.

மஹராஷ்ட்ரா மாநிலத்திலேயே அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனையடுத்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியான 4 லட்சத்து 95 ஆயிரத்து 513 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான 72 லட்சத்து 24 ஆயிரத்து 885 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.