விலகிய ராகுல் ஜோரி

Friday, 10 July 2020 - 14:28

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF++%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF
இந்திய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றாளர் பதவியிலிருந்து ராகுல் ஜோரி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரால் பதவி விலகல் கடிதம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவரது பதவி விலகல் கடிதம் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது பதவி விலகல் திடீரென ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்கான காரணங்கள் இதுவரையில் வெளிப்படுத்தபடவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.