பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி..!

Saturday, 11 July 2020 - 7:47

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..%21
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற தேர்தலின் முடிவுகளுக்கு அமைய, 93 மொத்த ஆசனங்களில் ஆளும் கட்சி 83 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையில் 61.2 வீதமாக இது அமைந்துள்ள போதும். கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளும் கட்சி 70 வீத ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.

இதற்கமைய, ஆளும்கட்சியின் வாக்குவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி 10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நேற்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.