கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியுமென உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

Saturday, 11 July 2020 - 13:27

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த 6 வார காலமாக சர்வதேச ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிததுள்ள போதிலும், குறித்த தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வாய்ப்பு இன்னும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம், இதற்கு உதாரணமாக இத்தாலி, ஸ்பெய்ன், தென்கொரியா மற்றும் மும்பையில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசைத் தொகுதியான “தாராவி” ஆகிய நகரங்களை எடுத்துக் காட்டினார்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் வைரஸ் பரவலை பரிசோதனை, அடையாளப்படுத்தல், தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகள் வழங்குவதன் ஊடாக கட்டுப்படுத்த முடியுமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல, சர்வதேச நாடுகளுக்குள் பரவி வரும் குறித்த கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலகலாவிய சகோதரத்துவமும் ஒற்றுமையும் இன்றியமையாதவை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மேலும் தெரிவித்துள்ளார்.