அதி நவீன உலங்கு வானூர்திகளை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா..!

Saturday, 11 July 2020 - 13:50

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE..%21
சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா புதிதாக போர் உலங்கு வானூர்திகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

அமரிக்காவின் போயிங் விமான நிறுவனம் அப்பாச்சி ரகத்தின் உலங்கு வானூர்திகள் 22 மற்றும் சினுக் ரக இராணுவ உலங்கு வானூர்திகள் 15 ஆகியன இந்திய இராணுவத்திற்கு வழங்கியுள்ளன.

அப்பாச்சி ரக வானூர்திகளானது உலகின் மிக முன்னேறிய பல்நோக்கு உலங்கு வானூர்தியாக கருதப்படுகிறது. மேலும் இந்த உலங்கு வானூர்திகளை வழங்கிய 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

கடந்தாண்டு அமெரிக்க அதிபரின் இந்திய விஜயத்தின் போது அப்பாச்சி உலங்கு வானூர்திகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. மேலும் இரு நாடுகளின் இராணுவ உபகரணங்கள் கொள்வனவுக்கான ஆண்டு வருகை 18 பில்லியன் டொலர்களாகும்.