கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஓகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பம்

Saturday, 11 July 2020 - 13:38

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+18%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
மேற்கிந்திய தீவுகள் அணியில் இடையே நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி Trinidad & Tobago நாட்டில் தொடங்க உள்ளதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை மற்றும் Trinidad & Tobago அரசாங்கம் இடையே நடந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி போட்டிகள் தொடங்கி செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி நிறைவு பெறும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் வீரர்களை ஒருங்கிணைத்து அனைத்து அணிகளும் ஒரே விடுதியில் தங்க வைக்கப்படுவர் எனவும் அனைத்து வீரர்களுக்கும் அவ்வபோது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே ஐபிஎல் போட்டிக்கு அடுத்தபடியாக பார்வையாளர்களை கொண்ட தொடராக இருப்பது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஆகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதல்தர வீரர்கள் இத்தொடர்களில் பங்கேற்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வம் கூடியுள்ளது.