கிரிக்கெட் பார்க்கவே மாட்டேன்..! முரளிதரனாக நடிக்க சம்மதித்தது ஏன்? விஜய் சேதுபதி கருத்து

Monday, 13 July 2020 - 11:29

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D..%21+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%3F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படத்தை, தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தயாரிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்ததில்லை. இதை நான் முத்தையா முரளிதரன் அவர்களிடம் கூட கூறினேன், அதற்கு அவர், இந்த படத்தில் நடிக்க சரியான தகுதி இதுதான் என சொன்னார்.

மேலும் இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க உள்ளதாகவும், ஆனால் அது சற்று கடினமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.