தரவரிசை பட்டியலில் ஜேசன் ஹோல்டர் முன்னெற்றம்

Wednesday, 15 July 2020 - 12:43

%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
டெஸ்ட் கிரிக்கட் தரவரிசை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவை டெஸ்ட் கிரிக்கட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் ஒரு இடம் முன்னேறி 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜேசன் ஹோல்டா, 862 புள்ளிகளை பெற்று இவ்வாறு டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.