இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

Thursday, 16 July 2020 - 8:05

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
 
இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு மென்செஸ்டரில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
 
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
 
சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில், ஒரு புள்ளியையேனும் பெற்றிராத மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த வெற்றியின் மூலம் 40 புள்ளிகளை பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது.
 
360 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, இந்தப் பட்டியலில் முதலாம் இடத்திலும், 296 புள்ளிகளைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 2 ஆம் இடத்திலும் உள்ளன.
 
180 புள்ளிகளுடன், நியூஸிலாந்து அணி 3ஆம் இடத்திலும், 146 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4ஆம் இடத்திலும், 140 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5ஆம் இடத்திலும் உள்ளன.
 
இலங்கை அணி, 80 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலும், தென்னாபிரிக்க அணி 24 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணி புள்ளிகள் எதனையும் பெறாமல் 9ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.