முடக்கப்பட்டுள்ள ட்விட்டர் கணக்குகள்

Thursday, 16 July 2020 - 9:06

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அமெரிக்காவில் உள்ள பிரபலமானவர்களின் ட்விட்டர் கணக்குகள், பிட்கொய்ன் மோடி விடயத்தில் இணைய ஊடுருவிகளினால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா, பில்லியனர்களான எலென் மஸ்க் நுடழn ஆரளம, ஜெப் பெஸோஸ் , பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
பரக் ஒபாமா உள்ளிட்டவர்களின் ட்விட்டர் கணக்கின் மூலம், நன்கொடைகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எல்லோரும் திருப்பித் தருமாறு தன்னை கோருவதாகவும், தற்போது நேரம் வந்துவிட்டதாகவும் பில்கேட்ஸின் ட்விட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நீங்கள் ஆயிரம் டொலர் அனுப்புங்கள், உங்களுக்கு நான் இரண்டாயிரம் டொலரை திருப்பி அனுப்புகின்றேன் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனினும், குறித்த ட்விட்டர் பதிவுகள், பதிவிடப்பட்டு சில நிமிடங்களுக்குள்ளேயே அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேநேரம், கடவுச்சொல் மீளமைப்பு கோரிக்கையும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், இந்த பாதுகாப்பு நிலைமை தொடர்பாக தாங்கள் அறிந்துள்ளதாகவும், அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
 
 


மரணித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு..?
Monday, 03 August 2020 - 22:59

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட... Read More

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோரள்
Monday, 03 August 2020 - 22:31

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஜலலாபாட் நகரில் உள்ள மத்திய... Read More

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பின வீரர்கள்
Monday, 03 August 2020 - 15:28

சர்வதேச விண்வெளி மையத்தில் 2 மாத ஆய்வுக்கு பிறகு நாசா விண்வெளி... Read More