மாற்றங்களுடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி

Thursday, 16 July 2020 - 14:43

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான இன்று ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் இலங்கிலாந்து அணியில் பல மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய முதல் போட்டியில் விளையாடிய வேக பந்து வீச்சாளர் ஜேம்ஸ் என்டர்ஸன் மற்றும் மார்க்வுட் அணியில் இணைத்து கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜோ டின்லி போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியிலல் 4 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் 26 பேர் கொண்ட பூர்வாங்க அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இரு அணிகளுக்கும் இடையில் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகள், மூன்று 20 க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரை இந்த மாதம் நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
 
எனினும், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.