பதற்ற நிலைமையினை கட்டுப்படுத்த கண்ணீர் புகை தாக்குதல்

Thursday, 16 July 2020 - 14:58

+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4++%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+
அங்குலான காவற்துறை நிலையத்தின் முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலைமையினை கட்டுப்படுத்த காவற்துறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்க முன்னிலையான இரண்டு நபர்களை கல்கிசை ,மொரட்டுவை என காவல் நிலையங்களுக்கு அழைத்து கொண்டே சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அங்குலானை காவல் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் அங்குலான வாழ் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.